உலகளாவிய எஸ் என்ட் பீ நிதிக் கல்வியறிவுக் கணக்கெடுப்பின்படி (S&P Global FinLit Survey), இலங்கையின் கல்வியறிவு விகிதம் 92%எனினும், நாட்டின் நிதி கல்வியறிவு விகிதம் 35% மட்டுமே. இது வளர்ந்த நாடுகளின் நிதி கல்வியறிவு சராசரியான 65% (S&P Global FinLit) உடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது..
மறுபுறும், இலங்கையிலுள்ள 74% ஆன வளர்ந்தோர் முறைசார் நிதி நிறுவனங்களில் கணக்கொன்றினை ஆரம்பித்துள்ளனர். இது நிதிக் கல்வியின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டுவதுடன் நிதி அணுகல் என்பது நமது குறைந்த நிதிக் கல்வியறிவு மட்டங்களுக்கு முக்கிய காரணம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசிற்குள்ளது என்றாலும், நிதி எழுத்தறிவை மேம்படுத்துவதில் தனியார் துறையும் முதலீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆசியா செக்யூரிட்டிஸின் நிதி எழுத்தறிவு முன்னெடுப்பாகிய, தனமக, அனைத்து இலங்கையர்களுக்கும் சுயாதீனமான மற்றும் நன்கு அறியப்பட்ட நிதி முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாழ்க்கையின் முக்கியமான தேவைகளுக்காக அவசர நிதியை அமைத்துள்ளீர்களா? உங்கள் கடனை எவ்வாறு நிர்வகிக்கின்றீர்கள்? உங்களுக்கு கிடைக்கக்கூடிய வெவ்வேறு முதலீட்டுத் தெரிவுகள் யாவை? உங்கள் ஓய்வுக்கு நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வணிகத்திற்கு சரியான நிதியுதவியைப் பயன்படுத்துகிறீர்களா?
எங்கள் இணையமூலமான கற்றல் மையம் உங்கள் பணம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைக் கண்டறிய உதவும் குறுகிய மற்றும் எளிதில் பின்பற்றக்கூடிய காணொளிகளை வழங்குகிறது – வரவுசெலவுத் திட்டஉதவிக்குறிப்புகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட செல்வத்தை நிர்வகித்தல் முதல், நிறுவனத்தின் அறிக்கைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் உங்களுக்குப் பொருத்தமான முதலீட்டு மூலோபாயத்தைத் தேர்ந்தெடுத்தல் வரை.
சுயமாக வழிகாட்டப்பட்ட கற்கைநெறிகள் உங்கள் நேரஅட்டவணைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே நீங்கள் உங்கள் வேகத்திலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கற்றுக்கொள்ளலாம். அனைத்து உள்ளடக்கங்களும் உள்ளூர் கல்வி மற்றும் தொழில்வாண்மைத் துறைகளின் முக்கிய நிபுணர்களைக் கொண்ட எங்கள் பாடத்திட்டக் குழுவால் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.